விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் - அரசிற்கு வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வேண்டுகோள் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

 

தமிழகத்தில்,கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், விடைத்தாள் திருத்தும் பணி தள்ளிவைக்கப்பட்டது.பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை நடைபெறவுள்ளதாக பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், பிளஸ்-2 தேர்வானது கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற்றது. இதை சுமார் 8.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்நிலையில்,மாநிலம் முழுவதும் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி 2 தினங்களுக்கு முன் துவங்கியது.40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.மையங்களுக்கு செல்ல ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லையெனில்,கார் ஏற்பாடு செய்யப்படும்' என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.கோவை மாவட்ட வால்பாறையிலிருந்து பொள்ளாச்சிக்கு விடைத்தாள் திருத்தும் பணி 15 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் மூன்று ஆசிரியர்களை  பழது பார்க்கும் வாகனத்தில் அழைத்து செல்லப் பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு முககவசம், சானிடே சர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் சில மையங்களில் வழங்கப்படவில்லையென்றும், ஆசிரியர் மதிய உணவு தரமாக இல்லை என்றும் புலம்பி வருகின்றனர். ஆசிரியர்களை மையங்களுக்கு அழைத்து வர உரிய வாகனம் அனுப்பாமல் தங்களது வாகனங்களிலேயே வர வேண்டிய நிலையும் உள்ளது.   ஏற்கனவே கொரோனாவால் 60 நாட்களுக்கு மேலாக வீடுகளில் முடங்கி இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கு , இது போன்ற குறைபாடுகளை நீக்கி , ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.