5 ஆம் கட்ட ஊரடங்கு - புதிய தளர்வுகள் என்ன - முழு விவரம்


நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதில்

ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது


* திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.

* பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது

* சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.

* ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* ஜூன் 8-ம் தேதி முதல் உணவகங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

* பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.

* கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.

* அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.

* சிறப்பு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

* இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

* தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.

* மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக  அறிவிப்பு வெளியாகி உள்ளது